கழிவுநீர் கால்வாயில் விழுந்த கன்றுக்குட்டி மீட்பு.
கன்று குட்டியை மீட்ட தீயணைப்புத் துறையினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பஜார் வீதி ராஜாஜி தெரு கழிவு நீர் கால்வாயில் ஆபத்தான நிலையில் விழுந்து வெளியே வர முடியாமல் சிக்கி தவித்த கன்று குட்டியை மீட்க தீயணைப்பு நிலையத்திற்கு சமூக ஆர்வலர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் விரைந்து வந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் அருள் தலைமையிலான பணியாளர்கள் சில மணி நேரம் போராடி கன்று குட்டியை உயிருடன் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.