தேசிய அளவிலான கையுந்து பந்து போட்டி

வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

Update: 2024-12-19 13:31 GMT
68 -வது தேசிய அளவிலான 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கையுந்து பந்து போட்டி வருகிற 22 -ம் தேதி முதல் 26 -ம் தேதி வரை தெலுங்கானாவில் நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு வீரர்களுக்கு பயிற்சி முகாம், நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. பயிற்சியாளர் பிரசன்னா உடற்கல்வி ஆசிரியர் எஸ்.கண்ணன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் நேற்று சீருடைகள் மற்றும் காலணிகளை வழங்கி வாழ்த்தி வழி அனுப்பினார்.

Similar News