கரூரில்,அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூரில்,அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூரில்,அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரை அவமதித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு, அமித்ஷா உடனடியாக மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முழக்கமிட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாஜகவுடன் அதிமுக ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட திமுகவினர் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இதில், திமுகவினர் அம்பேத்கரின் உருவப்படத்தை கைகளில் ஏந்தியபடி, கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.