குமரி : திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி அமைச்சர்கள் ஆய்வு
கன்னியாகுமரி
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு பாலத்தினை இன்று (19-ம் தேதி) பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டு தெரிவிக்கையில்:- சுற்றுலாத்துறை சார்பில் கண்ணாடி கூண்டு பாலம் தமிழக முதல்வரால் 31 - ம் தேதி திறக்கப்படுகிறது. அதன் பின் அய்யன் திருவள்ளுவர் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். தொடர்ந்து 01.01.2024 அன்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் தலைமையில் பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது. என தெரிவித்தார்கள். நடைபெற்ற ஆய்வுகளில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.