இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட

மீனவர் குடும்பத்தினருக்கு நிவாரணம்

Update: 2024-12-19 09:56 GMT
நாகை அக்கரைப்பேட்டை டாடா நகரை சேர்ந்தவர் செல்வநாதன் (40). விசைப்படகு உரிமையாளர். இவரது விசைப்படகில் செல்வநாதன், அதே பகுதியை சேர்ந்த விஜயநாதன், பாக்கியராஜ், திடீர் குப்பத்தை சேர்ந்த குழந்தைவேல், சதன், ஆறுமுகம், ஆனந்தவேல், சுப்பிரமணியன், செந்தில், மாதவன், நாகூரை சேர்ந்த இனியவன், மயிலாடுதுறை மாவட்டம் கூழையாரை சேர்ந்த சரவணன் ஆகிய 12 மீனவர்கள், கடந்த 10 தேதி நாகை மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கடந்த 12-ம் தேதி அதிகாலை முல்லைத்தீவு அருகில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இயந்திர படகில் வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களின் விசைப் படகை சுற்றி வளைத்தனர். பின்னர் படகில் ஏறிய இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 12 பேரையும் சிறை பிடித்தனர். இது குறித்து தகவலறிந்த நாகை மாவட்ட மீனவ கிராம மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு, நாகை தன்னார்வலர்கள் பொறியாளர் மணிமாறன், பாலசுப்பிரமணியன், மணி, பாலா மற்றும் நிர்வாகிகள் நேற்று அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர்.

Similar News