மத்திய சபாநாயகருக்கு மதுரை வழக்கறிஞர் கடிதம்.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அமித்ஷா பேசிதை நாடாளுமன்ற அவை குறிப்பிலிருந்து நீக்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2024-12-19 10:02 GMT
அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.ராம சுப்ரமணியன் இன்று ( டிச.19)கடிதம் எழுதியுள்ளார். அதில் அவையின் கண்ணியத்தைக் கெடுக்கும் வகையில் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சபாநாயகர் நடவடிக்கை எடுக்காவிட்டால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்க நேரிடும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News