சட்ட மாமேதை அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, நாகை அவுரி திடலில் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் என்.கௌதமன் தலைமையில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மேகநாதன் முன்னிலை வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அமைச்சர் அமிஷாவை கண்டித்து கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், நாகை நகராட்சி தலைவர் ரா.மாரிமுத்து, நகர அவைத் தலைவர் லோகநாதன், நகராட்சி கவுன்சிலர் திலகர், நகர துணை செயலாளர் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதேபோல், நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டியில் கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் முன்னிலை வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அமித் ஷாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பிரதிநிதிகள் ஞானசேகரன், இளம்பரிதி, நரசிம்மன், ஒன்றிய அவை தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் செந்தில் ரவி, இளைஞரணி துணை அமைப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் ரபிக், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் புகழேந்திரன் மற்றும் மகளிர் அணி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். அதேபோல், கீழ்வேளூர், திருமருகல், வேதாரணியம், தலைஞாயிறு ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.