சிவகிரியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் உணவு ஆய்வு செய்தார்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் உணவு ஆய்வு செய்தார்
தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவுத் திட்டத்தில் பள்ளி மாணவ. மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை பார்வையிட்டும், விசுவநாதபேரி கம்மவார் இந்து உயர்நிலைப்பள்ளியில் சத்துணவுத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரத்தினையும் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் செயல்படும் அரசு மாணவியர் விடுதியினை பார்வையிட்டு அடிப்படை வசதிகள் மற்றும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர.