திருமலாபுரத்தில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-12-19 10:39 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருமலாபுரம் ஊராட்சியில் வேளாண்துறையின் மூலம் விதைப்பண்ணை அமைக்கும் திட்டத்தின் கீழ் 2 ஏக்கர் பரப்பளவில் விதைப்பண்ணை அமைக்கும் பணியினையும், தேசிய தோட்டக்கலைத்துறை மூலம் தேசிய இயக்கத்திட்டத்தின் கீழ் 2.5 ஏக்கர் பரப்பளவில் நில முடக்கு மற்றும் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் பணியினையும் நேரில் சென்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து வேளாண் கூட்டுறவு வங்கியில் 57 பயனாளிகளுக்கு ரூ. 67.87 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும், இரண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களை தொடங்கி வைத்ததற்கான சான்றிதழ்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்களுக்கு விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

Similar News