அமைச்சர் வருகையை முன்னிட்டு முன்னாள் எம்எல்ஏ ஆய்வு
அன்னசாகரத்தில் நாளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வருகையை முன்னிட்டு முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி ஆய்வு
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் விசைத்தறி நெசவாளர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் நகராட்சி சார்பில் வரி வசூலிப்பதை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ மாணவர்கள் சுப்பிரமணி வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரிடம் நேரில் சென்று நெசவாளர்கள் சார்பாக கோரிக்கை மனு அளித்திருந்தார். இதனை அடுத்து நெசவாளர்களை நாளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் சந்திக்க உள்ளார் அதனை தொடர்ந்து தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்ரமணி Ex.MLA இன்று (20.12.2024) நேரில் சென்று ஆய்வு செய்து நெசவாளர்களுடன் கலந்துரையாடினார். உடன் நகர கழக செயலாளர் நாட்டான்.மாது உட்பட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.