சூலூர்: ஈச்சர் லாரி டூவீலரில் மோதி இருவர் பலி !

சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் நடைபெற்ற சாலை விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-12-20 14:17 GMT
கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த வேலன் (70) மற்றும் இருகூரைச் சேர்ந்த கணேசமூர்த்தி (50) ஆகிய இருவரும் தனியார் இன்ஜினியரிங் கம்பெனியில் பணிபுரிந்து வந்த நிலையில், பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் ஈச்சர் லாரி மோதி உள்ளது. இதனை அடுத்து இருவரும் தனியார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து நேற்று சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News