கோவில் தெப்பக்குளத்தை சீரமைப்பு செய்ய நன்கொடை வழங்கும் கொடை வள்ளல்.
மதுரை செல்லூர் பகுதியில் உள்ள திருவாப்புடையார் கோவில் தெப்பக்குளத்தை சீரமைப்பு செய்ய மொத்த தொகையையும் நன்கொடையாக வழங்க உள்ள ராஜேந்திரன் அவர்களுக்கு பூமிநாதன் எம்எல்ஏ நன்றி தெரிவித்தார்.
மதுரை உலக புகழ் பெற்ற அருள்மிகு. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் உப கோவிலான மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 29 வது வார்டு செல்லூர் பகுதியில் அமைந்துள்ள திருவாப்புடையார் கோவிலின் தெப்பக்குளம் பல ஆண்டுகளாக இடிந்த நிலையில் உள்ளது. அந்தக் கோயிலின் தெப்பக்குளத்தை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் பார்வையிட்டு கோவிலின் தொன்மையை கருத்தில் கொண்டு அந்த கோவிலின் கட்டுமானத்திற்கு புனிதத் தன்மைக்கோ ஊறு நேராதவண்ணம் சரிசெய்யவேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் அவர்களுக்கும் பதிவு தபாலில் கடிதம் மூலம் தெப்பக்குளத்தை சீர் செய்ய கேட்டுக் கொண்டார். அதனடிப்படையில் தெப்பக்குளத்தை சீரமைக்க ரூபாய் 1,72,00,000 ஒரு கோடியே எழுபத்தி இரண்டு லட்ச ரூபாய் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு இருப்பதாகவும்., ஏற்கனேவே தெற்கு தொகுதியில் பல பொதுக்காரியங்களுக்கு தன்னுடைய சொந்த பணத்தில் உதவி வரும் செல்லூர் திருப்பதி விலாஸ் வத்தல் கம்பெனி உரிமையாளர் அய்யா .டி.கே.ராஜேந்திரன் அவர்கள் இந்த பணிக்கு உண்டான மொத்த தொகையையும் தானே தருவதாக உறுதியளித்துள்ளார் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் அவர்கள் கடிதம் மூலம் தெரிவித்ததையடுத்து இன்று (டிச.20) செல்லூரில் உள்ள அய்யா ராஜேந்திரன் அவர்களை சந்தித்து தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் அவர்கள் நன்றியை தெரிவித்தார் .