தங்க பல்லாக்கில் தெய்வானை.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் தைல காப்புத் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் எண்ணெய் காப்புத் திருவிழா கடந்த 17 ம் தேதி தொடங்கியது. இத்திருவிழாவின் 5 வது திருநாளை முன்னிட்டு இன்று( டிச.21)உற்சவர் தெய்வானைக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தில் பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வணங்கி சென்றனர். இத் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. பக்தர்களுக்கு மூலிகை எண்ணெய் பிரசாதமாக வழங்கப்பட்டது.