போளூா்-திருசூா் சாலையை அளவீடு செய்யும் பணி.

வட்டாட்சியா் மற்றும் நில அளவையரிடம் சமூக ஆா்வலா்கள் அண்மையில் மனு.

Update: 2024-12-21 17:15 GMT
போளூா்-திருசூா் சாலையை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து, திருசூா் கிராமத்துக்கு செல்வதற்காக சுமாா் 3 கி.மீ. தொலைவுள்ள சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலையை அந்தப் பகுதியில் வசிக்கும் சிலா் ஆக்கிரமித்துள்ளதால், சாலை குறுகலாக உள்ளதாகவும், உடனடியாக சாலை ஆக்கிரமிப்பை அகற்றி அளவீடு செய்ய வேண்டும் என்று வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் நில அளவையரிடம் சமூக ஆா்வலா்கள் அண்மையில் மனு அளித்தனா். அதன்பேரில், போளூா் வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் வட்ட துணை ஆய்வாளா் உமாநாத் ஆகியோா் போளூா்-திருசூா் சாலையை அளவீடு செய்தனா். இதில், வட்ட சாா்பு ஆய்வாளா் முருகன், வருவாய் ஆய்வாளா் மாலதி, கிராம நிா்வாக அலுவலா்கள் மகாலிங்கம், தமிழ்செல்வன் மற்றும் வருவாய்த்துறையினா் உடனிருந்தனா்.

Similar News