மாணவர்கள் விவசாயியின் உருவத்தில் நின்று உலக சாதனை

தூத்துக்குடி டிசம்பர் 23 தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள எஸ்டிஆர் பள்ளி மாணவ மாணவிகள் 160பேர் 45 வினாடிகள் இந்திய வரைபடத்தில் விவசாயியின் உருவத்தில் நின்று உலக சாதனை படைத்தனர்

Update: 2024-12-22 03:57 GMT
தூத்துக்குடி டிசம்பர் 23 தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள எஸ்டிஆர் பள்ளி மாணவ மாணவிகள் 160பேர் 45 வினாடிகள் இந்திய வரைபடத்தில் விவசாயியின் உருவத்தில் நின்று உலக சாதனை படைத்தனர் ஆண்டுதோறும் முன்னாள் இந்திய பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளான டிசம்பர் 23 தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது இதை முன்னிட்டு தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள எஸ் டி ஆர் பள்ளியில் விவசாயிகளை கௌரவப்படுத்தும் மற்றும் விவசாயத்தை , விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் இந்திய வரைபடத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் விவசாயத்தை குறிக்கும் வகையிலும் விவசாயிகள் உருவத்தில் 160 மாணவ மாணவிகள் 45 வினாடிகள் வரிசையாக நின்று உலக சாதனை படைத்தனர் பள்ளி மாணவ மாணவிகளின் இந்த உலக சாதனையை ஜீனியஸ் புக் ஆப் ரெக்கார்டு என்ற அமைப்பு பதிவு செய்து விரைவில் சான்றிதழ் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது இதைத்தொடர்ந்து போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியிலும் பள்ளி மாணவ மாணவிகள் ஈடுபட்டனர்

Similar News