காலமுறை ஊதியம் கோரி சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2024-12-25 12:39 GMT
சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சத்துணவு பணியாளர்களுக்கு தேர்தல் கால வாக்குறுதியான காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரத்து 750 மற்றும் அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும். தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படவுள்ள சமையல் உதவியாளர்களைக் காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் எஸ். சுகமதி சிறப்புரையாற்றினார். சத்துணவு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் வ. ஆறுமுகம், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலர் கே. முருகையன், மாவட்டச் செயலர் ஏ. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எம். ராமலிங்கம், அரசுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் எம். சிவகுருநாதன், செயலர் ஏ. ஜெயசீலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News