ஒசூர் அருகே மாந்தோப்பில் தஞ்சம் அடைந்த யானைகளை விரட்ட நடவடிக்கை.

ஒசூர் அருகே மாந்தோப்பில் தஞ்சம் அடைந்த யானைகளை விரட்ட நடவடிக்கை.

Update: 2024-12-26 00:38 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் கும்மளாபுரம் பகுதியில் சுற்றித்திரிந்த 6 யானைகள் மத்திகிரி மாவட்ட கால்நடை பண்ணையில் புகுந்தது. வனத்துறையினா் யானைகளை கும்மளாபுரம் நோக்கி விரட்டிய போது யானைகள் தேன்கனிக்கோட்டை சாலையைக் கடந்து தற்போது கெலமங்கலம் அருகே புதூா் கிராமம் பேட்டரி கம்பெனி ஒட்டியுள்ள புதா் மாந்தோப்புக்குள் சென்றது. அதனை வனத்துறையினா் தீவிரமாக கண்காணித்து வந்தனா். தற்போது யானைகள் மாந்தோட்டத்தை விட்டு வெளியே வரத் தொடங்கியுள்ளதால் யானைகளை அடா்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கையில் வனத்துறையினா் நேற்று மாலையில் ஈடுபட்டுள்ளனா்.

Similar News