ஆண்டிமடம் வானவில் மன்றம் சார்பில் கிராம அறிவியல் திருவிழா மாணவர்களுடன் பெற்றோர்கள் பங்கேற்பு
ஆண்டிமடம் வானவில் மன்றம் சார்பில் கிராம அறிவியல் திருவிழா மாணவர்களுடன் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
அரியலூர் டிச.26- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் வானவில் மன்றம் சார்பில் கிராம அறிவியல் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஆண்டிமடம் ஒன்றிய வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தலைமை வகித்தார். ஆண்டிமடம் ஒன்றிய வானவில் மன்ற கருத்தாளர்களான தமிழ்செல்வன் மற்றும் கலைவாணி ஆகியோர் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு கிராம அறிவியல் திருவிழா செயல்பாடுகளை நடத்தி காண்பித்தனர். விழாவில் மெட்ரிக் மேளா, அறிவியல் பாடல்கள், மந்திரமா தந்திரமா, மாணவர்களின் அறிவை தூண்டக்கூடிய புதிர் கணக்குகள், விடுகதைகள், மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் செயல்பாடுகள் உள்ளிட்ட அறிவியல் செயல்பாடுகள் நடத்தப்பட்டது. இதில் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்