ராமநாதபுரம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கீழக்கரையில் மின்வெட்டு மின்வாரியத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2024-12-26 11:57 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி முன்பாக கீழக்கரையில் முன்னறிவிப்பின்றி தொடர்ச்சியாக மின்தடை செய்வதை கண்டித்தும், மின்கணக்கு எடுக்கக்கூடிய கணக்காளர்கள் கால தாமதமாக கணக்கெடுப்பதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழக்கரை துணை மின்நிலையத்திற்கு கீழ் மொத்தம் 17 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. ஆனால், மின் இணைப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப மின் ஊழியர்கள் இல்லாமல் பற்றாக்குறை உள்ளது. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக மின் கம்பியாளர், ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. நகரில் பழுதுகள் ஏற்பட்டால், உடனடியாக சரி செய்ய முடியாத நிலை உள்ளது. காற்று வீசும் காலங்களில் மரக்கிளைகளில் மின் ஒயர்கள் உரசுவதால் அடிக்கடி மின்வெட்டு உண்டாகிறது.குறைகளை நிவர்த்தி செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று நகராட்சி அலுவலகம் முன்பாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் மின்வாரியத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சியாக இருந்தபோது, லேசான மின்வெட்டுக்காக மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் தற்போது கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர் என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி கோஷமிட்டனர்.

Similar News