தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், பைங்கால் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பைங்கால் உள்குடியிருப்பிற்கு ரூபாய் 11.27 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணியை, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், திமுக பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், உதவி பொறியாளர் பாரதி, ஊராட்சி மன்றத் தலைவர் அமுதா சுப்பிரமணியன், துணைத் தலைவர் திருஞானம், ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கவி மதன்குமார், மாவட்ட பிரதிநிதி கவிஞர் மா.பாலசுப்பிரமணியன், கே.எஸ்.கருப்பையன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.