தென்காசி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்
உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்
தென்காசி மாவட்ட காவல் துறையில் 8 உதவி ஆய்வாளர்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதில் அச்சன்புதூர், குற்றாலம், சுரண்டை, ஆலங்குளம், அய்யாபுரம், சங்கரன்கோவில் டவுன், சங்கரன்கோவில் தாலுகா ஆகிய பகுதிகளில் பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் ஜோசப், தர்மராஜ், அலெக்ஸ் மேனன், மாடசாமி முத்து, திலகர், மாரியப்பன், கார்த்திக், கணபதி செல்வம் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.