இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாதி நட்சத்திர மகா யாகம்.
சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாதி நட்சத்திர மகா யாகம் பாலாஜி, பட்டர் தலைமையில் இன்று நடைபெற்றது. முன்னதாக சுவாதி நட்சத்திர மகா யாகத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இந்நிகழ்வில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.