சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக ஆட்சியை கண்டித்து விருத்தாசலத்தில் 30 ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ அறிக்கை;

Update: 2024-12-27 18:14 GMT
அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழி தேவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய, சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய  திமுக ஆட்சியை கண்டித்து, கடலூர் மேற்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 27 ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:00 மணியளவில் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா அம்மா உணவகம் அருகில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை ஒட்டி இந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு, வருகின்ற 30ஆம் தேதி காலை 10 மணிக்கு விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா அம்மா உணவகம் அருகில் நடைபெற உள்ளது. அதுசமயம் மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர,பேரூராட்சி, வட்ட, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சிகளின் இந்நாள் முன்னாள் கவுன்சிலர்கள், செயல்வீரர்கள்-வீராங்கனைகள், கழக தொண்டர்கள், மகளிரணியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News