நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பருவ கால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கோரிக்கை
அருண்மொழி தேவன் எம்எல்ஏ வை பணியாளர்கள் சந்தித்துக் கோரிக்கை
விருத்தாசலத்தில் அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம் எல் ஏ அவர்களை நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் நேரில் சந்தித்து, தாமதப்படுத்திக் கொண்டிருக்கும், பருவ கால பணியாளர்களின் பணி நிரந்தரத்தை விரைவு படுத்த வேண்டியும், கொள்முதலில் NCCF நிறுவனத்திடம் ஒப்படைப்பதை தடுத்திடவும், கொள்முதல் பணியாளர்களின் வாழ்வாதார நலன்களை பாதுகாத்திடவும், நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டி கொள்முதல் பணியாளர்கள் சார்பாக கோரிக்கை மனு அளித்தனர்.