கிராம மக்கள் சாலை மறியல்
மதுரை உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணல்பட்டி கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . இவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு அருகில் உள்ள மேல பெருமாள்பட்டி கிராமத்திற்கு சுமார் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்குவதாகவும் அதுவும் மாதத்தில் ஒரு நாள் மட்டும் ரேஷன் பொருட்கள் இந்த இரு கிராமத்திற்கும் வழங்குவதாகவும், இவ்வாறு வழங்குவதும் முன்னறிவிப்பின்றி திடீரென வழங்குவதால் வேலைக்கு செல்பவர்கள் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுத்துவதாகவும், ஆகையால் தங்களுக்கு மணல் பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கடந்த 7 ஆண்டுகளாக அரசின் அதிகாரிகளுக்கு மனு அளித்து வந்த நிலையில் அதற்கு தீர்வு எட்டப்படாத காரணத்தால் நேற்று (டிச.26) மணல் பட்டி மற்றும் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் விக்கிரமங்கலம் உசிலம்பட்டி சாலையில் மணல் பட்டியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மறியலால் பொதுமக்கள் மற்றும் வேலைகளுக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மறியலில் சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜென்சி சுப்பிரமணியனும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.