கடையநல்லூர்: 28 வார்டுக்கு ஃபேவர் பிளாக் அமைக்க பூஜை

ஃபேவர் பிளாக் அமைக்க பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-12-27 01:40 GMT
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 28வது வார்டில் குண்டும் குழியுமாக பாதைகள் காணப்பட்டது. இதைக் கண்ட பகுதி பொதுமக்கள் தெருக்களில் சாலையில் அமைக்க வேண்டும் என நகர் மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு வழங்கினர். மனுவே ஏற்று புதியதாக அமைக்கப்பட உள்ள ஃபேவர் பிளாக் சாலை பணியினை 28வது வார்டு நகர மன்ற உறுப்பினர் மாரி முன்னிலையில் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுரஹ்மான் தலைமையில் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News