மேலூரில் போக்குவரத்து நெரிசல்.
மதுரை மாவட்டம் மேலூரில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்படுகின்றனர்
மதுரை மாவட்டம் மேலூர் திருப்பத்தூர் செல்லும் சாலையில், அழகர் கோவில் ரோடு சந்திப்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து சிக்கல் உள்ளது. திருச்சி, காரைக்குடி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அழகர்கோவில் ரோட்டில் திரும்ப வேண்டிய சூழ்நிலையில், பின்னால் ஏகப்பட்ட வாகனங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இவ்விடத்தில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் அமர்த்த கோரிக்கை எழுந்துள்ளது.