அனைத்து கட்சி அஞ்சலி கூட்டம்

முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு அனைத்து கட்சி அஞ்சலி கூட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது

Update: 2024-12-27 16:38 GMT
திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு அனைத்து கட்சி அஞ்சலி கூட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, சிபிஐ சிபிஎம் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் மன்மோகன் சிங் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியின் முன்னதாக தாடிக்கொம்பு சாலையில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து ஏராளமான தொண்டர்கள் பேரணியாக காமராஜர் சிலையை வந்தடைந்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பழனி சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான ஐபி செந்தில்குமார் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார், அஞ்சலி கூட்டத்தில் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா, வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பொன் முருகன்,மண்டல தலைவர்கள் பிலால் உசேன், ஜான் பீட்டர், ஆனந்த், கார்த்திக், திமுக பகுதி செயலாளர் பஜுஹுல் ஹக், சந்திரசேகரன், ஜானகிராமன், ராஜேந்திரன், எஸ் டி பி ஐ மாவட்ட தலைவர் அபுதாஹிர், தமுமுக மாவட்ட தலைவர் சேக் பரித், மதிமுக நகரச் செயலாளர் செல்வேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பிரபாகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன், தி.க மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி, தந்தை பெரியார் திராவிட கழகம் மாவட்ட அமைப்பாளர் சம்பத், அஇஅதிமுக அமைப்புச் செயலாளர் மருதராஜ், மற்றும் அனைத்துக் கட்சித் தொண்டர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Similar News