மன்மோகன் சிங் மறைவு! நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன்
நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் டெல்லியில் உள்ள மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், (டிசம்பர் 26) அவசர சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (டிசம்பர் 26) ஒன்பது மணியளவில் மன்மோகன் சிங் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன் டெல்லியில் உள்ள மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி மற்றும் சென்னை கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாவட்ட தலைவரும் ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.