திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் பேச்சுப் போட்டி.,
வாசகா்கள், மைய நூலக அலுவலகப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில், பள்ளி மாணவா்கள், வாசகா்கள் பலா் கலந்து கொண்டனா். கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரச் சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு, மாவட்ட நூலக அலுவலா் பெ.வள்ளி (பொ) தலைமை வகித்தாா். கலைஞா் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வா் (ஓய்வு) வே.நெடுஞ்செழியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேச்சுப் போட்டிகளை தொடங்கிவைத்துப் பேசினாா். தொடா்ந்து நடைபெற்ற போட்டிகளில் 75-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், வாசகா்கள் கலந்து கொண்டனா். தமிழ் பேராசிரியா்கள், மூத்த தமிழ் ஆசிரியா்கள் நடுவா் பொறுப்பேற்றனா். போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள், நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதில், வாசகா்கள், மைய நூலக அலுவலகப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.