கிருஷ்ணகிரி: புல் அறுக்க இரண்டு மூதாட்டிகள் கிணற்றில் தவறி விழுந்து பலி.

கிருஷ்ணகிரி: புல் அறுக்க இரண்டு மூதாட்டிகள் கிணற்றில் தவறி விழுந்து பலி.

Update: 2024-12-27 01:41 GMT
கிருஷ்ணகிரி அடுத்துள்ள பெல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த மூதாட்டி குப்பம்மாள்(70) பாலக்கோடு அருகேஉள்ள போடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தண்ணீரம்மாள், இவர்கள் இரண்டு பேரும் பெல்லம்பள்ளியில் தங்கி விவசாயம் செய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தங்கள் கால்நடைகளுக்கு புல் அறுக்க சென்ற போது இரண்டு பேரும் திடீர் என்று மாயமாகினர். இந்த நிலையில் நேற்று காலை பெல்லம்பள்ளியில் உள்ள விவசாய கிணற்றில் இருவரது உடல்கள் மிதந்தனர். தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் இரு உடல்களை மீட்டு விசாரணை நடத்தியதில் இருவரும் புல் அறுக்க சென்ற போது கிணற்றில் தவறி விழுந்தது தெரிந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News