கன்னியாகுமரி அருகே கல்குறும்பொத்தையை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் மகன் ரியாஷ் (18). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்று 25-ம் தேதி காலை தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் இவரது தம்பி 10-ம் வகுப்பு மாணவர் ரிபிள்டன் (16), மேலும் அதே பகுதியைச் சேர்ந்த ஜாண் கிறிஸ்டோபர் (27) ஆகியோர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சுசீந்திரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் டீ குடிக்க சென்றனர். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஈத்தங்காடு பெட்ரோல் பங்க் அருகில் வரும்போது எதிரே கொட்டாரம் நடுத்தெருவை சேர்ந்த சிதம்பரதாணு வயது 35 தனது தந்தையை பின்னால் ஏற்றிக்கொண்டு ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் ரியாஷ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதி உள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தம்பி ரிபிள்டன் பின்தலையில் பலத்த ரத்தகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜாண் கிறிஸ்டோபருக்கு பலத்தகாயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இது குறித்து தென்தாமரைகுளம் போலீசார் உயிரிழந்த ரிபிள்டன், உடலலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.