ராசிபுரத்தில் தி வி க சார்பில் தந்தை பெரியார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு..

ராசிபுரத்தில் தி வி க சார்பில் தந்தை பெரியார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு..

Update: 2024-12-25 13:05 GMT
இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகராட்சி அலுவலகம் எதிரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நகர அமைப்பாளர் சுமதி மதிவதனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டு, நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பெரியார், அம்பேத்கர், சேகுவேரா தலைவர்களின் நூல்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வரவேற்புரை திராவிடர்விடுதலைக் கழகத்தின் நகரச் செயலாளர் பிடல் சேகுவேரா மற்றும் சிறப்பு அழைப்பாளார்களாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் வி. சுந்தரம், மாநில துணைச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இ. சி.எ.பாசறை பிரபாகரன், மேலும் இதில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் வி சி.க கபிலன், மாவட்டச் செயலாளர் ஆதித் தமிழர் கட்சி இராவணன், முன்னிலை வகித்தனர். இதில் சிறப்புரை ஆற்றியவர்கள் எழுத்தாளர் சிவக்குமரன்,ஆசிரியர் மதியழகன், மேலும்,மேற்கு ஒன்றிய துணை செயலாளர் வி. சி. க கோபி, நகர அமைப்பாளர் இ. சி. எ. பாசறை பூபதி, ஒன்றிய செயலாளர் ஆதித் தமிழர் கட்சி சதிஸ் குமார், கண்ணன் தொகுதி அமைப்பாளர் இ.சி.எ. பாசறை ,ஒன்றிய துணைச் செயலாளர் ஆதித்தமிழர் கட்சி ராம் குமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆதித் தமிழர் கட்சி பிரசாந்த் குப்புசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர் இறுதியாக வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர்தி வி க ராமச்சந்திரன், நன்றியுரை ஆற்றினார்.

Similar News