தூய மரியன்னை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி.
மதுரை தூய மரியன்னை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள தூய மரியன்னை தேவாலயத்தில் இன்று (டிச.25) அதிகாலை பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மரியன்னை தேவாலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.