இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து
திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து, சம்பவ இடத்திலேயே வாலிபர் பலி, ஒருவர் படுகாயம்
திண்டுக்கல், பழனிரோடு, அவதார் செராமிக்ஸ் அருகே ஒரு இருசக்கர வாகனத்தில் 2 இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மேற்படி சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் தாடிக்கொம்பு போலீசார் விசாரணை.