திருச்செந்தூர்- நெல்லை பாசஞ்சர் ரயில்கள் நேரம் மாற்றம்!

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது

Update: 2024-12-26 05:41 GMT
.நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு தினசரி பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிது. இந்த நிலையில், இந்த ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் ரயில்கள் நேரம், எண்கள் மாற்ற விவரம் வருமாறு:- வண்டி எண் 56741 காலை 7.00 மணிக்கு பதில் 6.50 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு சென்றடைகிறது. வண்டி எண் 56735 காலை 9.45 மணிக்கு பதில் 9.50 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு சென்றடைகிறது. வண்டி எண் 56743 மதியம் 1.50 மணிக்கு பதில் 1.40 மணிக்கு புறப்பட்டு 4.20 மணிக்கு சென்றடைகிறது. வண்டி எண் 56737 மாலை 6.15 மணிக்கு பதில் 6.20 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு சென்றடைகிறது. செங்கோட்டை- நெல்லை செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு செல்லும் ரயில்கள் நேரம், எண்கள் மாற்ற விவரம் வருமாறு:- வண்டி எண் 56742 காலை 10 மணிக்கு பதில் 10.05 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு மதியம் 12.20 மணிக்கு வந்து சேருகிறது. வண்டி எண் 56738 பிற்பகல் 2.35 மணிக்கு பதில் 2.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு வந்து சேருகிறது. வண்டி எண் 56744 மாலை 6 மணிக்கு பதில் 6.05 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு சேருகிறது. நெல்லை-செங்கோட்டை-நெல்லை இடையே இயக்கப்படும் மற்ற ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் இல்லை. திருச்செந்தூர்- நெல்லை நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் பாசஞ்சர் ரயில்கள் புறப்படும் நேரம், எண்கள் மாற்ற விவரம் வருமாறு:- வண்டி எண் 56728 காலை 7.25 மணிக்கு பதில், முன்னதாக 7.15 மணிக்கு புறப்பட்டு, திருச்செந்தூருக்கு காலை 8.50 மணிக்கு சென்றடைகிறது. வண்டி எண் 56729 காலை 10.10 மணிக்கு பதில் 10.20 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு சென்றடைகிறது. திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு செல்லும் ரயில்கள் நேரம், எண்கள் மாற்றம் விவரம் வருமாறு:- வண்டி எண் 56727 காலை 7.20 மணிக்கு பதில் 7.10 மணிக்கு புறப்பட்டு, நெல்லைக்கு காலை 8.50 மணிக்கு வந்து சேருகிறது. வண்டி எண் 56004 காலை 8.15 மணிக்கு பதிலாக காலை 10.10 மணிக்கு புறப்பட்டு, 11.40 மணிக்கு சேருகிறது. வண்டி எண் 56732 பிற்பகல் 2.30 மணிக்கு பதில் 2.50 மணிக்கு புறப்பட்டு 4.20 மணிக்கு நெல்லையை வந்தடைகிறது. திருச்செந்தூர்- நெல்லை-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் மற்ற ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் இல்லை.

Similar News