புதிய மண்பாண்டம் தொழிற்கூடம் திறப்பு விழா.
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் மண் பாண்ட தொழிற்கூட புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் திருராமேஸ்வரம் ஊராட்சியில் மஞ்சவாடி கிராமத்தில் 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மண்பாண்டம் தொழிற்கூடம் திறப்பு விழாவானது திருராமேஸ்வரம் ஊராட்சி மன்ற தலைவர் பாமா கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு கல்வெட்டு மற்றும் கட்டிடத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திரு ராமேஸ்வர ஊராட்சி சேர்ந்த என்பதற்கு மேற்பட்ட பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.