போதை விழிப்புணர்வு குழந்தைகள் பேரணி
மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் போதையில்லா சமூகத்தை உருவாக்குவதை வலியுறுத்தி குழந்தைகள் பேரணி:-
Update: 2025-01-01 13:57 GMT
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் போதையில்லா சமூகத்தை உருவாக்க வலியுறுத்தி மூன்றாம் ஆண்டு குழந்தைகள் பேரணி பாலர் பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்றது. மாப்படுகை அண்ணா சிலையில் இருந்து புறப்பட்ட பேரணியை குடிமராமத்து கமிட்டி தலைவர் ராஜேஸ்வரன் துவக்கி வைத்தார். இந்த பேரணியில், போதையில்லா சமூகத்தை உருவாக்குவோம், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து மயிலாடுதுறையை மீட்டெடுப்போம், நஞ்சில்லாத உறவை உறுதி செய்வோம், சமத்துவ சமுதாயம் படைப்போம் எனக் கோஷங்களை எழுப்பி பதாகைகளை ஏந்தி சுமார் நூறு சிறுவர்கள் பேரணியாக சென்றனர். மாப்படுகை ரயில்வே கேட் அருகில் முடிவடைந்த பேரணியை மூத்த வழக்கறிஞர் பாலு முடித்து வைத்து பேசினார்.