தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நாகை கோட்ட நிர்வாக பொறியாளர் விநாயகம் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது அம்மையப்பன் தலைமை நீரேற்றும் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், வருகிற 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில், கீழ்வேளூர், கீழையூர், திருமருகல் ஆகிய ஒன்றியங்கள் மற்றும் நாகை நகராட்சி, கீழ்வேளூர் பேரூராட்சி, வேளாங்கண்ணி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.