தென் தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது நாள் நிகழ்ச்சியாக இன்று (ஜனவரி 6) அதிகாலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து திருவெம்பாவை பாடப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.