புகையான் நோய் தாக்குதலால் பயிரிடபட்ட சம்பா நெற்பயிர்கள் சேதம்...
மன்னார்குடி அருகே புகையான் நோய் தாக்குதலால் பயிரிடபட்ட சம்பா நெற்பயிர்கள் சேதம் நெல்மணிகள் முழுவதும் தட்டையாக உள்ளதால் அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை..
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே புதுதேவங்குடி, தேவங்குடி அரிச்சபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா ,நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் புகையான் நோய் அதிக அளவில் தாக்கி நெற்பயிர்கள் முழுவதும் நெல்மணிகள் இல்லாமல் கருக்காவாகவும் தட்டையாகவும் காணப்படுகிறது. இந்த தாக்குதலால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது நெற்பயிர்களில் கதிர் வரும் நேரத்தில் புகையான் நோய் தாக்குதலால் கதிர் வராமல் பாதிக்கப்பட்டுள்ளது நெல் உற்பத்தி குறைந்து விட்டது. இந்த ஆண்டு சாகுபடி செய்துள்ள சம்பா நெற்பயிர்கள் முழுவதும் மகசூல் பாதிப்பு ஏற்படும். எனவே பாதிக்கப்பட்ட சம்பா நெல் பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு முன்வரவேண்டும் என தெரிவித்தனர்.