தடுப்புச்சுவர் இல்லாத கால்வாய் விபத்து ஏற்படும் அபாயம்

காஞ்சிபுரத்தில் தடுப்பு சுவர் இல்லாத கால்வாயால் விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-01-08 15:16 GMT
காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு சம்மந்தமூர்த்தி நகர் பூங்காவை ஒட்டி, மழைநீர் கால்வாய் செல்கிறது. வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம்அதிகமுள்ள சாலையோரம்உள்ள கால்வாயின் ஒரு பக்கம் தடுப்புச்சுவர்இல்லாமல் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் மின்விளக்கு வசதி இல்லாத இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அதேபோல, மேய்ச்சலுக்கு இச்சாலையில் செல்லும் கால்நடைகளும், கால்வாயில் தவறி விழுந்துகாயமடைகின்றன. எனவே, விபத்தை தடுக்கும் வகையில் செவிலிமேடு, சம்மந்தமூர்த்தி நகர் பூங்கா பின்பக்கம் உள்ள மழைநீர் கால்வாய்க்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News