கரூரில் அரசு பொது நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பாதுகாவலர்களுக்கு தீ விபத்தை தடுப்பது குறித்த செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது.
கரூரில் அரசு பொது நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பாதுகாவலர்களுக்கு தீ விபத்தை தடுப்பது குறித்த செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது.;
கரூரில் அரசு பொது நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பாதுகாவலர்களுக்கு தீ விபத்தை தடுப்பது குறித்த செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் கரூரில் பொது நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அவர்கள் பணியாற்றும் இடத்தில் திடீரென ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு தடுப்பது, கட்டுப்படுத்துவது என்பது குறித்தான பயிற்சி கரூர் தீயணைப்பு மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் நிலைய அலுவலர் ரவிக்குமார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் பல்வேறு பொது நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பாதுகாவலர்கள், ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி கூட்டத்தில் உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் பணியாற்றக்கூடிய இடத்தில் தீ விபத்து ஏற்படாமல் எவ்வாறு தவிர்ப்பது, அல்லது திடீரென தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது, பணியாற்றக்கூடிய இடத்தில் உள்ள பாதுகாப்பு உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வருவது, தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தான பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் உள்ள தீயணைப்பு கருவிகளை வைத்து அதனுடைய செயல் ஆக்கம் குறித்து செயல் விளக்கம் அளித்தார். இந்த பயிற்சியின் நிறைவில் பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் சந்திரகுமார். சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு பயிற்சியாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.