வேலூர் திமுக எம்.பி கதிர்ஆனந்த் வழக்கு ஒத்திவைப்பு
திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வழக்கு நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2019- நாடாளுமன்ற தேர்தலில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிட்ட நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து நடந்த வருமான வரித்துறை சோதனையில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனுக்கு தொடர்புடைய இடத்திலிருந்து 11.44 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இவ்வழக்கு வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1- ல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் மீண்டும் 12.02.2025 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையில் இதே வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி 3, 4, 5 மற்றும் நேற்று (7) ஆகிய நான்கு தினங்கள் கதிர்ஆனந்த் வீடு கல்லூரி மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.