கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி.

மதுரையில் இன்று கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2025-01-09 06:32 GMT
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்டபொம்மன் சிலை பகுதியிலிருந்து இன்று (ஜன.9) காலை சேர்மத்தாய் வாசன் கல்லூரி நாட்டு நலத் திட்ட மாணவிகள் சுமார் 200 பேர் போக்குவரத்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி , விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு இரயில் நிலையம் வரை ஊர்வலமாக வந்தனர். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் கவிதா, போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன், செல்வின், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, பூர்ண கிருஷ்ணன் திலகர் திடல் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் அழகர், உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி, போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் சிதம்பரம்,லிங்ஸ்டன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News