அம்மையப்பன் ஊராட்சியை திருவாரூர் நகராட்சியுடன் இணைக்க கூடாது...
அம்மையப்பன் ஊராட்சியை திருவாரூர் நகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி அம்மையப்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பாக அம்மையப்பன் ஊராட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்..
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையப்பன் ஊராட்சியில் உள்ள தெங்காள் ஆணை வட வாதி ஓச்சேரி உள்ளிட்ட கிராமங்களை திருவாரூர் நகராட்சியுடன் இணைப்பதை கண்டித்தும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வரும் 100 நாள் வேலை உள்ளிட்ட பணப் பயன்களை பாதிக்கும் முடிவை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வரும் 100 நாள் வேலை பணிகள் பாதிக்கப்படும் என்ற நோக்கிலும் நகர்ப்புற பகுதிகளில் வரி வசூல் உயரும் என்ற அச்சத்திலோ பொதுமக்கள் திருவாரூர் நகராட்சியுடன் அம்மையப்பன் ஊராட்சியை இணைப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.