திருவாரூர்-தஞ்சாவூர் சாலையில் சாலை மறியல் போராட்டம்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு எதிரே தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர்-தஞ்சாவூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகம் எதிரில் உள்ள திருவாரூர்-தஞ்சாவூர் சாலையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்,MGNREGS திட்டத்திற்கு தனி ஊழியர் கட்டமைப்பினை ஏற்படுத்திடுதல் வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மாவட்டத் தலைவர் என்.வசந்தன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் கே.எஸ்.செந்தில் உரையாற்றினார் மேலும் கண்டன உரையினை முன்னால் மாநில தணிக்கையாளர் புஷ்பநாதன், மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் ஈடுபட்டனர் சுமார் அரை மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.