புதிய காவல் துணை ஆணையர் பதவியேற்பு.
மதுரையில் புதிய காவல் துணை ஆணையராக (வடக்கு) அனிதா அவர்கள் பதவியேற்றுக் கொண்டார்
மதுரை மாநகரத்தின் காவல் துணை ஆணையராக (வடக்கு) இருந்த மதுகுமாரி அவர்கள் மதுரை 6 வது பட்டாலியன் எஸ்.பியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதால் அந்த இடத்திற்கு புதிதாக திருமதி G.S. அனிதா TPS, அவர்கள் இன்று (06.01.2025) பொறுப் பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் நெல்லை தலைமையகத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.