மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.
மதுரையில் இலவச மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகளை அறந்தாங்கி நிஷா வழங்கினார்.
மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முதலுதவி சமூக நல அறக்கட்டளை மற்றும் அறந்தாங்கி நிஷா அன்பு அறக்கட்டளை மற்றும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று( ஜன.5) நடைபெற்றது. இதற்கு முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் அபு இக்பால் மற்றும் முனைவர் சி அர்சத் முபின் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் 150 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று பயன்பெற்றனர். இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து சிறப்பித்த விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மருத்துவ முகாமினை தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவர் விசாலாட்சி தல்லாகுளம் போக்குவரத்து உதவி ஆணையர் இளமாறன் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி, தொழிலதிபர் முகமது அஃரபாத், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில மகளிர் அணி தலைவி மற்றும் தென்மண்டல அமைப்பாளர் அன்னலட்சுமி சகிலா கணேசன் ஆகியோர் துவங்கி வைத்தனர் .