திமுக அரசை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து பொன்னேரியில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2025-01-06 09:51 GMT
திருவள்ளூர்: திமுக அரசை கண்டித்து பொன்னேரியில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பொங்கல் பரிசு தொகுப்புடன் 2000 ரூபாய் வழங்க வேண்டும் கஞ்சா மது போதையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அண்ணா சிலை முன்பாக அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்தும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 2000 ரூபாய் வழங்க வலியுறுத்தியும் கஞ்சா மது போதையை கட்டுப்படுத்தாத திமுக அரசை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் டில்லி தலைமையில் கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொன்னேரி மீஞ்சூர் கும்மிடிப்பூண்டி ஆரணி மாதவரம் செங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிளை ஒன்றிய பேரூர் நகர மாவட்ட கழக தேமுதிக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News